• May 17 2024

தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?- லியோ பட வெளியீட்டுக்கு முதலே கசிந்த தகவல்

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் லியோவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு அவர் விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் .

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேபோல் விஜய்க்கும் ஒரு தரமான படத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அரசியல் களத்தை அடிப்படையாக வைத்துதான் விஜய் படம் உருவாகும் என்று கூறப்பட்ட சூழலில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்துதான் படம் உருவாகிறது என்று லேட்டஸ்ட் தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.


அதேபோல் வெங்கட் பிரபு இயக்கும் படங்களின் பெயர்கள் எப்போதும் கவனம் ஈர்ப்பவை. எனவே விஜய் படத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இந்நிலையில் விஜய் 68 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படம் அடுத்த வருட தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. பிகில் படத்துக்கு பிறகு விஜய் நடித்த மாஸ்டர், வாரிசு ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகவில்லை. அதேபோல் லியோ படமும் தீபாவளிக்கு வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement