• Sep 27 2023

ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கொடுக்காததற்கு காரணம் இதுவா? முக்கிய பிரபலம் போட்ட டுவீட்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 69 வது தேசிய திரைப்பட விருது குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.


இதில் சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு கிடைத்து இருந்தது. மேலும் பல விருதுகளை தெலுங்கு சினிமா பிரபலங்கள் தட்டி சென்றனர்.


கடந்த 2021 ஆண்டு வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகர் என்ற பிரிவில் விருது கிடைக்கும் என்றும் மேலும் சிறந்த துணை நடிகர்களுக்கான விருது மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோருக்கு கிடைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அமையவில்லை..


இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது இந்தியாவின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இது தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement