• May 13 2024

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இது தானா..?வெளியானது போஸ்டர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் பகத் பாசில், சூர்யா ,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன்தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரித்துள்ளார். படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அத்தோடு 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

மேலும் இந்த படத்தில் யார் யார் என்னென்ன வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முதல்முறையாக நேற்று பகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய போஸ்டரோடு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘சந்தானம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement