• Jan 19 2025

கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கும் பிக்பாஸ் பூர்ணிமாவுக்கும் இடையில் இப்படியொரு உறவு இருக்கிறதா?- வைரலாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் 75 நாட்களைக் கடந்து தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகவும் உள்ளது.இதில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் பூர்ணிமா. 


யூடியூப் பிரபலமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர்இந்த நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சைக்குரிய பிரபலமாக மாறியுள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பக்கம் இருக்க திடீரென உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் பூர்ணிமா இருக்கும் புகைப்படம் என கூறி போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.


 இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.ஆனால் அந்த போட்டோவில் இருப்பது மெஸ்ஸியின் மனைவி Antonela Roccuzzo தான். மெஸ்ஸியின் மனைவி பார்ப்பதற்கு பூர்ணிமா போல் இருக்கிறார் என்பதால் இப்படி சிலர் போட்டோவை உலவ விட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement