• Apr 28 2024

வெளிநாட்டுக்குப் போனது ஒரு குற்றமா?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பொல்லாதவன் பட ரம்யா- வெளியாகிய கியூட்டான கிளிக்ஸ்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் ரம்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.


 எனவே நடிகர் சூர்யா உடன் 'வாரணம் ஆயிரம்', தனுஷுடன் 'பொல்லாதவன்' அர்ஜுனுடன் 'கிரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார். 


தமிழில் மட்டுமல்லாது கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.நடிப்பையும் தாண்டி ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர் இவர்.இப்படி பிஸியாக இருக்கும் இவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக இன்று தகவல்கள் வெளியாகியிருந்தன.


ஆனால் அது முற்றலும் வதந்தி என்றும் அவர் சுவிர்ஸலாண்டில் இருக்கும் அழகிய புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. அத்தோடு தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜாலியாக இருக்கும் நடிகையைப் பற்றி இப்படி சொல்லி விட்டார்களே என்று புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement