• Sep 21 2024

நடிகை சௌந்தர்யாவின் மறுபிறவியா இவர்? காருக்குள் இருந்து கண் சிமிட்டும் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

'கந்தர்வா' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கடந்த 1992 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புக்களும் இவருக்கு வந்து குவியத் தொடங்கின. அந்தவகையில் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக 'பொன்னுமணி' என்கிற படத்தின் மூலம் 1993 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அத்தோடு இவர் நடிப்பில் உருவான 'முத்துக்காளை, அருணாச்சலம், படையப்பா, சொக்கத்தங்கம்' போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத படங்களாக அமைந்து உள்ளன.

கடந்த 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றபோது அவர் சென்ற அந்த விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை சௌந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்து வருகின்றது.

 

இந்நிலையில் தற்போது பார்ப்பதற்கு இவரைப் போலவே ஒரு பெண் வீடியோக்களில் தோன்றி அனைவரையும் அசர வைத்து வருகிறார். அந்தவகையில் சௌந்தர்யா போலவே இருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் சித்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் சௌந்தர்யாவின் மறுபிறவியா? என்பது போல் பல கேள்விகளை எழுப்பி வந்தார்கள்

.

இந்நிலையில் தற்போது நடிகை  சௌந்தர்யா நடித்த திரைப்படங்களில் வரும் பாடல்கள், டைலாக்ஸ் ஆகியவற்றை ரீல்ஸ் பண்ணி தனது இன்ஸ்ராக்கிராமில் பதிவிட்டு வருகிறார்.இவரின்  நடிப்பு,பேச்சு,முக பாவனை,பாடி லாங்குவேச் என்பன  அச்சு அசல் நடிகை  சௌந்தர்யா போலவே இருக்கு.

தற்போது காருக்குள் இருந்தவாறு சூரிய வெளிச்சில் கண்ணை சிமிட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.இது தற்போது செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement