• May 18 2024

வசூல் வேட்டையில் தூள் கிளப்பும் 'பொன்னியின் செல்வன்'... தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியாம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இவரின் கனவு திரைப்படமான இப்படமானது செப்டெம்பர் 30-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.


திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டயராக சரத்குமாரும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்து அசத்தியிருந்தனர்.


மிகப்பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு, மற்றும் சிறந்த விமர்சனங்களும் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.


தமிழகர்கள் கொண்டாடி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படமானது வெளியான முதல் நாளே படம் ரூ. 80 கோடி வசூலித்து சாதனை செய்தது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


உலகம் முழுவதும் ரூ. 400 கோடியை எட்டிவிட்ட இப்படம் ரூ. 500 கோடியை எட்டும் எனக் கூறி வருகின்றனர். மேலும் படம் ரிலீஸ் ஆகி 12 நாட்கள் ஆகின்ற நிலையில், தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 178 கோடி வரை வசூலித்துள்ளது. விரைவில் இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 200 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement