சூர்யா சிறந்த நடிகர் அவரை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் நடந்த அலங்கு திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த விடையம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் அலங்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்வில் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசும் போதே இயக்குநர் மிஷ்கின் நடிகர் சூர்யா குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.
சூர்யா ஒரு நல்ல அழகான நடிகர், நாங்க தான் அவரை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். நம்மளோட இப்போ சிவாஜி இல்லை, எம்.ஜி.ஆர் இல்லை இப்படி பெரிய பெரிய ஹீரோக்கள் இப்போது நம்மளோட இல்லை. அவங்களோட சேர்ந்து நடித்த சிவகுமார் வீட்டின் செல்ல பிள்ளைகள் தான் சூர்யா, கார்த்தி. இவங்க 2 பேருமே ரொம்ப நல்ல நடிகர்கள். இவர்களை நாங்கதான் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை சொன்னதற்காக நான் சூர்யாவிற்கு கதை சொல்ல இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும் பேசிய இயக்குநர் மிஷ்கின் நான் கதை சொல்ல போவதும் இல்லை, அவர் கேட்டாலும் இயக்க போவதும் இல்லை. நாங்க ஒரு படத்தினை வெற்றி பெற வைக்க படாத படு படுகிறோம் அப்படித்தான் பலரும் செய்கிறார்கள். ஆனால் சில காரணங்களினால் படம் தோல்வி அடைகிறது என்று கூறியுள்ளார்.
இவ்வாறு இயக்குநர் மிஷ்கின் கூறிய விடையம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தின் தோல்வியை மனதில் வைத்துக்கொண்டுதான் இயக்குநர் மிஷ்கின் இவ்வாறு பேசி இருக்கிறார் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
Listen News!