விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் நடைபெற்று வருகின்றது. இதில் திறமை உள்ள பல சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வருகின்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் சூப்பர் சிங்கர் மேடையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
இந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீசன் மேடையில் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பங்கு பற்றி உள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்களை விஜய் டிவி தனது இணைய தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
d_i_a
சமீபத்தில் இந்த சீசனில் பங்கு பற்றிய விஷ்ணு என்ற சிறுவன் வார இறுதி நாட்களில் பெற்றோருடன் விறகு வெட்ட செல்வதாக கூறிய நிலையில், தொகுப்பாளர் பிரியங்கா அவர்களின் குடும்பத்துக்கு கேஸ் அடுப்பு ஒன்றை வாங்கி கொடுத்தார்.
இன்னொரு பக்கம் இந்த செய்தியை அறிந்த ராகவா லோரன்ஸ் குறித்த கிராம மக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மேலும் குடிநீருக்கான குழாயும் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்த செயலுக்கு குறித்த ஊர் மக்கள் ராகவா லாரன்ஸுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!