• May 18 2024

உங்களோட படத்தில் நான் நடிக்க வேண்டும்- ஸ்மாட்டாக கேள்வி கேட்ட சிம்புவுக்கு நச்சுன்னு பதிலளித்த கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.இப்படத்தில் சிம்பு 'முத்து' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். 

 உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில்,நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கமல்ஹாசன் சிம்பு ஏ.ஆர் ரகுமான் கௌதம் மேனன் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அப்போது பேசிய போது  சிம்பு கமல்ஹாசனிடம் , “நான் உங்களுடைய படங்களில் எதாவது ஒரு படத்தின் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டால் அந்து எந்த படம் சார்?” என கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், “நீங்கள் நிறைய படம் நடிக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. ஆனால் ஏதாவது ஒரு படம் நடிக்கணும் என்றால் எங்கூட நடிக்கணும்” என்றார். உடனே அரங்கம் கலகலவென அதிர்ந்து கரகோஷத்தால் ஆர்ப்பரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement