“நான் அப்படி சொல்லவே இல்லை, கிளாமருக்கு அர்த்தமே வேற”… கீர்த்தி சுரேஷ்

திரைப்படத்துறையில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவர் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து இருந்த சர்க்காரு வாரி பாட்டா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று கீர்த்தி சுரேஷ் தொடை தெரியும் அளவுக்கு ஷார்ட் ஆன உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். ‘எனக்கு கிளாமர் செட் ஆகாது, நான் அப்படி நடிக்க மாட்டேன்’ என சொல்லி ஹோம்லியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷா இப்படி என கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் கூறி இருக்கும் கீர்த்தி சுரேஷ், “நான் அப்படி சொல்லவே இல்லை. கிளாமர் என்ற வார்த்தைக்கு அழகு என்று அர்த்தம். நான் அந்த வார்த்தையை தவறாக சித்தரித்து வருகிறோம். நான் அதிகம் skin show இருக்கும் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை” என குறிப்பிட்டு இருக்கிறார்.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்