தமிழ் சினிமாவில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இப்படம் வெற்றி பெற்றதோடு தனது யதார்த்தமான நடிப்பையும் இப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் வாரிசு நடிகை என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியிருந்தாலும் தனது குரலினாலும் ,நடனத்தினாலும், நடிப்பினாலும் தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
அந்த வகையில் இவர் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த லாபம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபாஸுக்கு ஜோடியாக சலார் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை கே.ஜி.எப் திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வருகின்றார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் அவரின் காதலனான சாந்தனுவுடன் தங்கி வருகிறார். அவ்வப்போது தனது காதலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
இதனிடையே ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஸ்ருதியிடம் அவருக்கு பிடித்த மனிதன் யார் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்ருதி அவரின் காதலன் சாந்தனுவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . இதனால் ரசிகர்கள் அப்போ அப்பாவைப் பிடிக்காதா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தந்தையின் படத்திலேயே நடிகராக அறிமுகமாகும் செந்திலின் மகன்- படப்பிடிப்பிலிருந்து லீக்கான போட்டோஸ்
- நாகசைத்தன்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன் மற்றும் ராணா- அதிரடியாக வெளியாகிய புதிய படத்தின் அப்டேட்
- ஆக்ரோஷமாக ராகவா லாரன்ஸ் நிற்கும் ருத்ரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர
- நயன்-விக்கி திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!