• Jan 19 2025

கேரளாவில் அதிக சாதனை படைத்த கோட் திரைப்படம்! எப்படி தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், இந்தப் படம் தொடர்பான அப்டேட்டுகளும் ப்ரோமோஷன்களும் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக கோட் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்ததோடு வெவ்வேறு இடங்களில் அதற்கான காட்சிகள் வடிவமைக்கப்பட்டது. இதன் காரணத்தினால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது.

அது மட்டும் இன்றி கோட் படத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் சமீபத்தில் பிரேம்ஜி கூட பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். எனவே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளார்கள்.

அது மட்டும் இன்றி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக மறைந்த விஜயகாந்த் அவர்களையும் நடிக்க வைத்த காட்சிகள் பேசு பொருளாக காணப்படுகின்றன. மேலும் பவதாரணி குரலில் வெளியான சின்ன சின்ன கண்கள் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


கோட் திரைப்படம் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியாவதாக இந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு டிக்கெட் புக்கிங் படுவேகமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கேரளவில் அதிக ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் வேற்று மாநில படம் என்ற சாதனையை கோட் திரைப்படம் படைத்துள்ளது. தற்போது இது தொடர்பான போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement