• Sep 14 2024

தங்கலானை பார்த்து தொங்கலாம்னு தோணுது...! பிரபல சினிமா விமர்சகர் பகிர்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் படம் ஒன்று ரிலீஸ் ஆகின்றது என்றால் அது ரசிகர்களை  சென்றடைவதற்கு முன்னர் திரைப்பட விமர்சகர்களின் அபிப்பிராயத்தில் சிக்கி விடுகின்றன. இதனால் ஒரு சிலர் அவர்களின் கருத்துக்களை கேட்டு படம் பார்ப்பதா இல்லையா என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். இதில் மிகவும் அதிகப்படியான ரசிகர்களால் பின் தொடரப்படுபவர்களுள் ஒருவர் தான் ப்ளூ சட்டை மாறன். 

இந்த நிலையில், விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் பற்றி முழு சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,  தங்கத்தை எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கத்தை எடுப்பதற்காக அவர்கள் சிந்திய ரத்தம், இழந்த உயிர் பலி என்பது அளவில்லாத விஷயம். அந்த வலியையும் வேதனையும் தான் படமாக சொல்லப் போகின்றார்கள் எனத்தான் நினைத்து போனான். ஆனால் இந்த படத்தில் ரஞ்சித் தான் எவ்வளவு அறிவாளி என்பதை காட்டியுள்ளார்.

அவர் கோலார் தங்க வயல் என்ற ரத்த சரித்திரத்தை படமாக எடுக்காமல் வருணாசிரமம், சிறு தெய்வ வழிபாடு, ராமானுஜம், கிறிஸ்தவ மதம், பெருமாள், முஸ்லிம் மதத்தில் இருந்து ஒரு திப்பு சுல்தான் ஆகியவற்றை எடுத்து வைத்து தன்னுடைய ஜாதி மதம் குறித்து அரசியல் நிலைப்பாட்டை நேரடியாக சொல்லாமல் வழக்கம்போல உருட்டி உள்ளார்.


பரதேசி படத்தையும் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் அப்படியே எடுத்தது போல உள்ளது. ஒரு படம் ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது. ஆனால் ஒரு படம் புரியவே இல்லை என்றால் அது யாருடைய தவறு. வசனமும் புரியவில்லை. கதையும் புரியல. பல பேர் இதைத்தான் சொல்லுகின்றார்கள்.

ஆரம்பம் நன்றாக இருந்தது. ஆனால் போகப் போக படத்துடன் கனெக்ட் தெரியவில்லை. இதில் விக்ரம், பார்வதி, மாளவிகா அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் படத்தை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இந்த படம் முடியும்போது பார்ட் 2 லீப் கொடுத்து முடிக்கின்றார்கள். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உண்மைக்கு நெருக்கமான படங்களை கொடுத்த ரஞ்சித் உண்மையான ரத்த சரித்திரம் குறித்து படமெடுத்துள்ளார் என தங்கலானை பார்த்து தொங்கலாம்னு தோணுது என்று பங்கமாக கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement

Advertisement