• Jan 19 2025

பிக் பாஸ் சலுகை ஒன்றும் எனக்கு தேவையில்லை! திடீரென அனைத்தையும் தூக்கியெறிந்த மாயா? திடுக்கிடும் முடிவு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வீரநடை போட்டு கொண்டிருக்கும் பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7.  இந்த நிகழ்ச்சி முடிவடையும் நாட்களை நெருங்கி இருப்பதால் போட்டியாளர்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர் . 

இந்த வேளையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட மாயா அவர்கள்  விசித்திராவிடமும் , பூர்ணிமாவுடனும் ஒரு விஷயத்தை கலந்துரையாடிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 


அதில் அவர் கூறியதாவது," எனக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் சலுகைகளை வழங்காவிட்டாலும் எனக்கு கவலையில்லை , என்னால் சொந்தமாக திரைப்படங்களை உருவாக்க முடியும் , எல்லாவற்றையும் நானே உருவாக்குவேன் என்று கெத்தாக கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது . 

இதன்போது, மாயா சொல்வதுக்கெல்லாம்  தலை ஆட்டிக் கொண்டு பூர்ணிமாவும் விசித்திராவும் உணவு உண்டு கொண்டு இருந்தனர் . 

இதில் மாயா , பூர்ணிமா கட்சியில் விசித்திராவும் இணைந்து கொண்டார் என்பது நாம் அறிந்ததே.இதன்போது விசித்திராவின் ஒரு சில உண்மையான குண நிலைகள் வெளியில் வந்து விட்டது என்றும்  ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் .


Advertisement

Advertisement