• May 18 2024

2மகன்கள் உள்ள நிலையில்.. புதிய காதலியின் செருப்பைக் கையில் ஏந்திய ஹிருத்திக் ரோஷன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். அதுமட்டுமல்லாது இந்திய அளவில் அழகான நடிகர்களில் ஒருவராகவும் ஹிருத்திக் ரோஷன் விளங்கி வருகின்றார். 


இவர் தனது மனைவி சுஷானேயை 2014-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு அழகிய மகன்கள் இருக்கின்றனர். பிரிந்தாலும் அவர்களை இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே கவனித்துக் கொள்கின்றனர். 

மேலும் சமீபகாலமாக ஹிரித்திக் ரோஷன்- ஷபா ஆசாத் என்ற பிரபல பாலிவுட் நடிகையைக் காதலித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நீதா அம்பானியின் கலாச்சார மைய திறப்பு விழா பிரமாண்டமாக நடைப்பெற்றது. 


இதில் ஹாலிவுட்-பாலிவுட் என அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் ஹிரித்திக் ரோஷன், தனது காதலியுடன் கலந்து கொண்டார். அப்போது காதலியின் காலணிகளை கையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement