• Mar 19 2024

சுந்தரி, கண்ணம்மா நடித்துள்ள N4 படம் எப்படி இருக்கு?...சினிமா விமர்சனம் இதோ!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சுந்தரி மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல்களின் கதாநாயகிகள் ஆன கேப்ரில்லா மற்றும் வினுஷா தேவி வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்த படம் N4. இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை, அனுபமா குமார், அபிஷேக் ஷங்கர், வடிவுக்கரசி, அழகு உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் திரைக்கதை விமர்சனம் என்ன என்பதை பார்ப்போம். படத்தில் மைக்கேல் தங்கத்துரை, கேப்ரில்லா, அப்சல் அமீத், வினிஷா தேவி ஆகிய நால்வரும் பெற்றோர் இல்லாமல் அனாதையாக இருக்கிறார்கள்.

இவர்களை சிறுவயதிலிருந்தே வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். பின் இவர்கள் வளர்ந்ததும் சென்னை காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். அப்போது கல்லூரி மாணவரான அபிஷேக் கமல் தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து மது அருந்துவதும் சிகரெட் பிடிப்பதும் போன்ற கெட்ட பழக்கத்தை செய்து கொண்டிருப்பார்.

அந்தப் பகுதியின் N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நடிகை அனுபமா குமார் பணியாற்றுகிறார். இப்படி இவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் இருந்தாலும் ஒருவர் மற்றவர்களுடன் அறிமுகம் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடக்கிறது.அதனால் அனைவரும் ஒரே வட்டத்திற்குள் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த பரபரப்பான சம்பவம் என்ன என்றும், அதனால் இவர்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படுகிறது. அதிலிருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கின்றனர்.

அதிலும் சீரியல் நடிகைகளான கேப்ரில்லா மற்றும் வினுஷா தேவி இருவரும் சின்னத்திரையில் நடித்து அசத்தியது போலவே வெள்ளித் துறையிலும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை இயக்குனர் சிறப்பாக தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று படத்தைப் பார்த்து பலரும் விமர்சிக்கின்றனர். மேலும் இந்த படம் முழுவதும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் கதையை இயல்பாக காட்டியுள்ளனர்.படத்தின் பின்னணி செய்யும் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. மேலும் இந்த படத்தை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அளவுக்கு அதிகமாக இருந்ததால், ஆரம்பத்தில் படம் பார்ப்போருக்கு தொய்வை ஏற்படுத்தியது.

காரணம் படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரம் இருந்ததால் அதையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தது. மேலும் படத்தின் சில லாஜிக் மிஸ் ஆனது. இயக்குநர் கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் படம் சுமார் தான்.

Advertisement

Advertisement

Advertisement