• Apr 27 2024

அபுதாபி ஓட்டலில் தொகுப்பாளினி டிடி..அதுவும் இவருடனா..வெளியான புகைப்படம்..!

dd
Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவர் பிரபல சேனல்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி இருந்தாலும், காஃபி வித் டிடி தான் மக்கள் மத்தியில் இவருக்கு  என்று ஒரு அடையாளத்தை பெற்று தந்தது.

ஆனால், தற்போது வழக்கம் போல் இல்லாமல் தனது உடல்நல குறைவு காரணமாக முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார் டிடி. அண்மையில் கூட நயன்தாராவின் கனெக்ட் படத்தின் ப்ரோமோஷன் Interview நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் பதிவு செய்வதை வழக்காக வைத்துள்ளார்.

 அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் தனது அக்கா மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.டிடி-யின் மருமகன் இப்படி வளர்ந்துட்டாரா என்ற பலர் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மருமகனுடன் அபுதாபி சென்றுள்ளார். அத்தோடு அங்கு ஓட்டலில் சாப்பாட்டிற்காக காத்திருக்கிறோம் என்ற ஒரு பதிவை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement