• Sep 21 2024

தொகுப்பாளினி அர்ச்சனாவின் புதிய நிகழ்ச்சி-அவருடன் இணையும் மகள் ஷாரா-வெளியானது புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா .அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனக்னெ ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியது.

இப்போது தான் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் மாம் நிகழ்ச்சியின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அத்தோடு  அர்ச்சனா ஜீ தமிழுக்கு சென்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இதோ அவரது மகளுடன் அர்ச்சனா தொகுத்து வழங்கப்போகும் நிகழ்ச்சியின் போட்டோஸ்,








Advertisement

Advertisement