• May 18 2024

பேசியே சாவடிக்கிறான் சார்... கமலிடம் கம்ளேன் பண்ணிய ஜிபி முத்து... வெளியான ப்ரோமோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஆரம்பமாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வின் ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் ஹவுஸ்மேட்ஸ் உடன் கலந்துரையாடிய கமல்ஹாசன் "போட்டியாளர்களுக்கு இடையேயான பிரெண்ட்ஷிப் என்ன நிலைமையில் இருக்கு" என கேள்வி ஒன்றினைக் கேட்டார். 


இதற்கு முதலில் பதிலளித்த நடிகை மகேஸ்வரி, கதிர் உடனான தன்னுடைய பிரண்ட்ஷிப் குறித்து பேசினார். இவரைத் தொடர்ந்து பேசிய அமுதவாணன் அவர்கள் ஜிபி முத்து உடனான நட்பு குறித்து பேசினார்.

அதாவது தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தபோது தான் முதல்முறையாக பேசியதாகவும், தற்போது பிரெண்ட்ஷிப்பே வேண்டாம் என சொல்லும் அளவுக்கு அவருடன் நான் ஸ்டாப்பாக பேசி கலாட்டா செய்து வருவதாக அமுதவாணன் கிண்டலாக தெரிவித்தார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஜிபி முத்து "அமுதவாணன் ரொம்ப பாடா படுத்துறான் சார், பேசிய சாவடிக்கிறான் சார் என சொல்ல, கமலும் ஹவுஸ்மேட்ஸும் சிரிக்கின்றனர். இந்த காட்சிகளையெல்லாம் பார்க்கும் போது இன்னைக்கு எபிசோடு, ஜிபி முத்துவின் ஒன் மேன் ஷோவாக தான் இருக்கும் என பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இது  அந்த ப்ரோமோ வீடியோ இதோ..!


Advertisement

Advertisement