• May 18 2024

அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் சிலை... ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் அஜித். தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உண்டு. அதுமட்டுமல்லாது இவரின் படங்களை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஏராளம். 

இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக 'துணிவு' திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அந்தவகையில் இப்படத்திலிருந்து அண்மையில் வெளிவந்த 'சில்லா சில்லா..' பாடல் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் உருவத்தை அப்படியே சிலையாக செய்து, அதனை வைரலாக்கி வருவதை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறாராம்.

அந்தவகையில் தற்போது அஜித்தின் சமீபத்திய லுக்கை அச்சு அசல் அப்படியே உருவ சிலையாக செய்து அசத்தியுள்ளார் ரசிகர். அந்த உருவ சிலையின் புகைப்படம் ஆனது தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement