மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ,அர்ஜுன் ,ரெஜினா ,திரிஷா நடிப்பில் நாளைய தினம் வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் 3 ஆவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.அனிருத் இசையமைப்பில் இப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் தற்போது "தனியே தள்ளாடி போகிறேனே .."என அனிருத்தின் குரலில் வெளியாகியுள்ளது.பல பிரச்சனைகளின் பின் நாளை இப் படம் வெளியாகவுள்ளது.இப் படத்தின் முழு நேர வெளியீட்டிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
ஏறத்தாழ இரண்டு வருடங்களின் பின் அஜித் படம் திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.அனைத்து தியேட்டர்களிலும் 90 சதவீதமான பதிவுகள் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.படம் எவ்வாறு அமையப்போகின்றது என நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!