தென்னிந்தியாவில் தனது நடனத்தாலும் நடிப்பாலும் மக்கள் மனங்களை கவர்ந்தவரே நடிகை சாய்பல்லவி. இவர் மலையாளம் , தெலுங்கு மற்றும் தமிழ் எனப் பல மொழிகளில் திரைப்படங்களை நடித்துள்ளார். குறிப்பாக , சாய்பல்லவி மலையாள திரைப்படமான பிரேமம் படத்தின் மலர் என்ற கதாப்பாத்திரத்தின் ஊடாகவே திரையுலகில் அறிமுகமானார்.
இதனை அடுத்து மாரி 2 , என்.ஜி.கே , கரு மற்றும் அமரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சாய்பல்லவி நடிக்கின்ற படங்களில் அவரது நடனத்தை பார்ப்பதற்காகவே அதிகளவான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு சிறப்பாக நடனமாடி பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை ஆவார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சாய்பல்லவி தனது ஆசையை அதில் கூறியுள்ளார். அவர் அதில் கூறுகையில் , நான் அதிகளவான நடிகருடன் நடித்துள்ளேன். எனினும் எனக்கு விஜய் சாருடன் நடிப்பதற்கு ரொம்ப விருப்பம் என்று கூறியுள்ளார்.
அத்துடன் , தான் நடனம் ஆடப்பழகியதே விஜய் சார பார்த்து தான் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் விஜய் தற்போது அரசியலுக்குள் சென்றதால் இனிமேல் படம் நடிக்கப்போவதில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது ஆசை நிறைவேறாது போய்விடும் எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
Listen News!