• Jan 19 2025

மீண்டும் திரையில் கவுண்டமணி! வெளியாக இருக்கும் திரைப்பட அப்டேட் இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடிநடிகர்கள் என்னறாலே செந்தில்-கவுண்டமணி தான் ஞாபகம் வரும் அவர்களின் நடிப்பை இன்று வரைக்கும் கொண்டாடி வருகின்றனர். வடிவேலு, விவேக் ஆகியோர் உச்சம் எட்டிய போது கவுண்டமணி,செந்தில் காமெடி கூட்டணியின் பங்களிப்பு குறைந்தது. உடல் நலமின்மை, வயது காரணமாக கவுண்டமணி நடிப்பதை குறைத்துக்கொண்டு ஓய்வில் இருந்து வந்தார்.


நீண்ட இடைவெளிக்குப்பிறகு கடந்த 2015ம் ஆண்டு '49-ஓ' படத்தில் நடித்தார். தொடர்ந்து 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', 'வாய்மை' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் 2016க்குப் பிறகு தற்போதுவரை நடிப்புக்கு விடுமுறை விட்டிருந்த கவுண்டமணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஒத்த ஒட்டு முத்தையா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்தப் படத்தை ஷாஷி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கவுண்டமணிக்கு காமெடி டிராக் எழுதி வந்த சாய் ராஜகோபால் எழுதி, இயக்குகிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நல்ல அரசியல்வாதி, கெட்ட அரசியல்வாதி, பொதுமக்களில் ஒருவர் என முப்பரிமாணங்களில் மூன்று வேடங்களில் கவுண்டமணி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement