• May 19 2024

இதோ ஆண்டவரின் அடுத்த வீடியோ... எதிர் பார்த்த பிக் பாஸ் ப்ரோமோ ரிலீஸ்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பமாகப்போகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 


அந்தவகையில் அக்டோபர் 1-ஆம் தேதி இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. அத்தோடு பிக்பாஸில் இந்த முறை இரண்டு வீடுகள் என்ற தகவல் வெளியான நாளிலிருந்து இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது.


மேலும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் அடிக்கடி வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றது.  ஏற்கனவே வெளியான லிஸ்ட்டில் உள்ளவர்கள் பலர் இப்போது கலந்து கொள்ளவில்லை என்ற தகவலும் இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றது.

மேலும் அக்டோபர் 1-ஆம் தேதி அதாவது நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. ஒவ்வொரு நாளிலும் ஆரம்பிக்க இன்னும் 3 நாள் ,2 நாள் என்று சொல்லி கொண்டுவந்த ஆண்டவர்  தற்போது ஒரு நாள் இருக்கும் நிலையில் "உள்ள யாருயாரு வருவான்னு இந்நேரம் கணிச்சியிருப்பிங்க ,உங்க கணிப்பு சரியான்னு பாக்க இன்னும் 1 நாள் இருக்கு" என்று நடிகர் கமல்ஹாசன் சொல்வதோடு ப்ரோமோ முடிகிறது. இனி ஆரம்பமாகப்போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் வரை ரசிகர்களுக்கு ஆர்வம் கூடிகொண்டுதான் இருக்கும்.

     

Advertisement

Advertisement