• Apr 27 2024

இவரும் கீர்த்தி சுரேஷை போஃலோ பண்ணி விடக் கூடாது - யசோதா படத்தின் டீசரைப் பார்த்து குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இரட்டை இயக்குநர்களான ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் யசோதா. இப்படத்தில் சமந்தா சோலோ ஹுரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் வரலக்ஷ்மியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த நிலையில் இன்றைய தினம் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது.அதில்  சாதாரண குடும்பப் பெண்ணாக மருத்துவமனைக்கு வரும் சமந்தா கர்ப்பவதியாக இருக்கும் காட்சிகளும், வயிற்றில் ஸ்கேன் எடுக்க காட்டும் சீன்களும் காட்டப்படுகின்றது.


ஆனால், அடுத்த நொடி ஆச்சர்யமாக சமந்தாவின் கதாபாத்திரம் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் மாறுவது ரசிகர்களை ஷாக் ஆக்குகிறது. யசோதாவின் கரு கலைந்து விடுகிறதா? அதற்காக சிலரை அவர் பழிவாங்கும் படமாக இருக்குமா? இந்த படம் என்கிற யோசனையையும் டீசர் கொடுத்துள்ளது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்திலும் அவர் கர்ப்பவதியாக நடித்திருப்பார். தனது குழந்தையை காப்பாற்ற போராடுவார். கடைசியில் அவரது தோழியே வில்லியாக இருப்பார். அதே போல இந்த யசோதா படத்தின் கதையும் இருந்து விடக் கூடாது என  கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement