• May 12 2024

நடிகர் ரஜினிகாந்த்துக்கு கருங்கல்லில் சிலை வைத்து கடவுளாக வழிபடும் தீவிர ரசிகர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 


இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோயில் கட்டி தினமும் வணங்கி வருகிறார் அவருடைய தீவிர ரசிகரொருவர்.

அதன்படி, மதுரை - திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோயில் கட்டி, 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லில் அவருக்கு சிலை வைத்து நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.


குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement