• May 17 2024

நீங்க கண்ணால பார்த்தீங்களா- குறும்படம் போட்டுக் காட்டிய கமல்ஹாசன்- பல்பு வாங்கிய அசீம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வாரம்‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ என்கிற டாஸ்க் நடைபெற்றது.

 டாஸ்க்கின்படி, வழக்கம்போல, சொர்க்கவாசிகள் வீட்டின் உள்ளேயும் நரகவாசிகள் கார்டன் ஏரியாவின் கூண்டிலும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதன்படி ஹவுஸ்மேட்ஸ் போட்டியுடன் விளையாடி அமுதவாணன் ஜனனி ஏடிகே மணிகண்டன் ஆகியோர் நாமினேஷன் ப்ரீஷோனுக்கு தேர்வாகியுள்ளனர்.

மேலும் இந்த வாரம் ஏடிகே தான் வெளியேறுவார் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருந்து. இந்த நிலையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் 3வது ப்ரோமோவில் விக்ரமன் தான் முதலில் வீட்டுக்குள்ளே நுழைந்தும் ஜனனி தான் என்று மாற்றி விட்டார்.

இதற்கு ஜனனிக்கு ஆதரவாக பேசினார்கள்.அதிலும் அசீம் ஜனனி தான் முதலாவதாக சென்றதை பார்த்ததாகவும் கூறினார். இதனால் கமல்ஹாசன் யாரில் பிழை என்பதை குறும்படம் போட்டுக் காட்டியுள்ளார். இது குறித்த 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement