• Apr 27 2024

ஜிபி முத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாரா...? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்... பதறிப்போன ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

டிக்டாக் மூலம் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமானவர் ஜிபி முத்து. இவரின் நகைச்சுவை நிறைந்த நடிப்பிற்காக என்றே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் மூலம் கிடைத்த வரவேற்பினால் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-ஆவது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.


பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே தன்னுடைய சுவாரசியமான பேச்சினால் பட்டையைக் கிளப்பிய அவர், இந்த சீசனில் இறுதிவரை சென்று டைட்டில் வின்னர் ஆவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ஜிபி முத்து. 


அதாவது தனது மகனை பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை, தன்னை வெளியே விடுமாறு பிக்பாஸிடம் கெஞ்சி அலுத்து மன்றாடிக் கேட்டார். கமலும் அவரை பல வழிகளில் சமாதானப்படுத்த முயற்சித்தும் மகன் மீதுள்ள பாசத்தால் அதனை ஏற்க மறுத்த ஜிபி முத்து யார் பேச்சும் கேட்காமல்  பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜிபி முத்துவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 


இந்நிலையில் தற்போது ஜிபி முத்துவை போலீஸார் கைது செய்து கூட்டிச் செல்லும் படியான ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிப் பரவி வருகின்றன. அது பிராங்க் வீடியோ ஒன்றில் எடுத்த புகைப்படம் எனத் தெரியாமல் ஜிபி முத்துவின் ரசிகர்கள் சற்று பதறிப்போனார்.

அதாவது யூடியூப் சேனல் நடத்தி வரும் ஜிபி முத்து சமீபகாலமாக புது படங்களின் புரமோஷனுக்காகவும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான லவ் டுடே படத்துக்காக இயக்குநர் பிரதீப் உடன் சேர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேறலெவலில் வைரல் ஆனது. 

இதனைத் தொடர்ந்து தற்போது 'பரோல்' படத்துக்காக புரமோஷன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து. அந்த வீடியோவின் உடைய தொடக்கத்தில் போலீஸ் கெட் அப்பில் இருக்கும் இரு நபர்கள் ஜிபி முத்துவை கைது செய்வது போன்ற காட்சிகள் அட்டகாசமாக இடம்பெற்றிருக்கும்.


அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போலீஸார் ஜிபி முத்துவைக்க கைது செய்து விடடார்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இது பிராங்க் வீடியோ என்று தெரியாத ரசிகர்கள் பலரும் ஜிபி முத்து உண்மையிலேயே கைதாகி விட்டார் என நினைத்துப் பதறிப் போயுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement