• Oct 16 2024

ஜீவானந்தத்தை காலி பண்ணக் கிளம்பிய குணசேகரன்- முக்கிய நபரைச் சந்தித்து எல்லா விஷயத்தையும் கேட்டறியும் ஜனனி

stella / 1 year ago

Advertisement

Listen News!


'எதிர்நீச்சல்' சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாக தற்போது குணசேகரனுக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாமல் போன நிலையில், நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துள்ளார்.

 குணசேகரனுக்கு, பிசியோதெரபி பயிற்சிகள் மற்றும் உரிய சிகிச்சைகள் எடுத்தால் ஒரு வேலை அவரின் கை கால்கள் சரியாகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே நேரம் சரியாகாமல் போகவும் வாய்ப்புள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.


இப்படியான நிலையில் குணசேகரன் தன்னுடைய சொத்தை எப்படியாவது ஜீவானந்தத்திடம் இருந்து பறிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்.இந்த நிலையில் ஜனனி யாரையோ சந்தித்து ஜீவானந்தம் பற்றிய டீரைல்ஸ் எடுத்துத் தரும்படியாக கூறுகின்றார்.

அதே போல குணசேகரன் கதிரைக் கூட்டிக் கொண்டு சென்னையில் யாரையோ பார்த்து இந்த சொத்துப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரனும் என்று இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. இதனால் யார் தான் சொத்தை சீக்கிரம் மீட்பார்கள் என்ற எதிர்பார்ப்புரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


Advertisement