• May 18 2024

ஜி.பி. முத்து சொன்னது தான் ரொம்ப சரி: திடீரென கருத்துக்களை கூறி வரும் நெட்டிசன்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ வீடியோ மொக்கையாக இருக்கிறது என்று பலரும் தமது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி இரண்டாவது வாரம் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய முதல் ப்ரமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் கதை சொல்லும் டாஸ்கில் பலரும் கதை சொல்லி அழுததை காட்டி தப்பிக்கப் போவது யார் என்கிறார் பிக் பாஸ்.

ப்ரமோ வீடியோவை பார்த்தவர்கள்  தெரிவித்திருப்பதா, ப்ரொமோ ரொம்ப மொக்கையாக இருக்கிறது. பத்தல, பத்தல. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். சக போட்டியாளர்களுக்கு விக்ரமன் மீது ஏன் இவ்வளவு கோபம். ரொம்ப மோசம். விஜே கதிர் சைலன்ட் கில்லர். பஸ்ஸரை தட்ட என்ன ஒரு வேகம் காட்டுகிறார். விக்ரமனுக்கு நல்லா வேண்டும். அசல் ஒரு சைக்கோ. அவரை வெளியே அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள்.

பஸ்ஸரையும் அழுத்துகிறார்கள், கையும் தட்டுகிறார்கள். யாருய்யா நீங்க என்று ஜி.பி. முத்து கேட்பது தான் மிகவும் சரியென பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறப் போவது யார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

அத்தோடு வார இறுதி நாட்களில் வரும் கமல் ஹாசன் அந்த அசல் கோலாரை லெஃப்ட் அன்ட் ரைட் விட வேண்டுமென்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். குவின்ஸியின் கையை அசல் தடவிக் கொண்டே இருந்ததை பிக் பாஸ் கண்டிக்காதது பார்வையாளர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.



Advertisement

Advertisement