பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா இரண்டு நாட்களில் வீட்டை காலி பண்ணலாம் என்று சொல்ல, தன்னால் வீட்டை விட்டு வர முடியாது, ஆனால் எனக்கு நீயும் வேணும் மையூவும் வேணும். அதனால் இந்த வீட்டிலேயே ஒன்றாக இருப்போம் என்று கோபி சொல்லுகின்றார்.
இதைத்தொடர்ந்து பாக்கியா மையூவுக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கும்போது நாங்க இந்த வீட்டை விட்டு போகத்தான் வேணுமா என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் அதுதான் நல்லது என்று பாக்கியா சொல்ல, அப்படி என்றால் நான் உங்களை மிஸ் பண்ணுவேன் என்று மையூ சொல்கின்றார்.
அதற்கு உனக்கு எப்ப தோணுதோ நீ அப்ப என்ன வந்து பார்க்கலாம்.. எனக்கு எப்போ தோணுதோ அப்ப நான் உன்னை வந்து பார்ப்பேன் என்று சமாதானம் பண்ணுகின்றார் பாக்கியா.
அதன் பின்பு இனியா டான்ஸ் கம்பெட்டிஷனுக்கு ரெடியாகி கொண்டு இருக்க, கோபி ராதிகாவையும் வருமாறு அழைக்கின்றார். ஆனால் தான் வரவில்லை என்று சொல்லவும் இல்லை நீ வந்து வரத்தான் வேண்டும் என்று கோபி அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கின்றார்.
டான்ஸ் காம்படீஷனில் இனியா பங்கு பற்றுவதற்கு முன்பு எல்லாரும் அவர்களை அறிமுகம் செய்து வைக்கின்றார்கள். இதன் போது தனது பெற்றோரும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று இனியா ஆசைப்பட அவர்களை ஸ்டேஜுக்கு அழைக்கின்றார்கள்.
அந்த நேரத்தில் கோபி ராதிகாவை வருமாறு அழைக்கின்றார். ஆனால் இது சரிவராது என்று ராதிகா சொல்லவும் அதை கேட்காமல் ராதிகாவை அழைத்துச் செல்லுகின்றார்.
பாக்கியாவும் மேடைக்கு போன காரணத்தினால் இனியாவுக்கு இரண்டு அம்மாவா வித்தியாசமான குடும்பமா இருக்கு என எல்லோரும் இனியாவை பார்த்து சிரிக்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!