• Sep 13 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து மீண்டும் விலக முடிவெடுத்துள்ள கோபி- அவரே வெளியிட்ட வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


பாக்கியலட்சுமி சீரியலை பார்ப்பவர்கள் அனைவரும் கோபியை திட்டாத நாளே இல்லை. தினமும் எபிசோடை பார்த்து விட்டு கோபி ரோலை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் கூட்டம் இங்கு ஏராளம். சின்னத்திரை சீரியல் வரலாற்றில் கதையின் வில்லனும் ஹீரோவும் ஒருவரே என்றால் அது கோபி கதாபாத்திரம் தான்.

மேலும் சீரியலின் கதைப்படி கோபி மீண்டும் தன்னுடைய தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து விட்டார். பாக்கியாவின் லைசன்சை எடுத்து மறைத்து வைத்துள்ளார். இதனால் பாக்கியா எப்படி இந்த பிரச்சினையில் இருந்து விடுபடப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.


இந்த நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஷ் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார். அதில், கோபி கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் பலர் தன்னை விமர்சிப்பதாகவும் தவறான வார்த்தைகளால் திட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.இதனால் இந்த சீரியலில் எத்தனை நாட்கள் நடிப்பேன் என்றும் தெரியவில்லை என்றும் விரைவில் சீரியலை விட்டு விலக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இதனால் ரசிகர்கள் பலரும் மற்றவர்களுக்காக நீங்க எதுக்காக சீரியலை விட்டு விலகிறீங்க.யாருக்காகவும் நீங்க விலகக் கூடாது என்று அறுதல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement