• May 19 2024

தனி ரூமிற்கு சென்றதும் ராதிகாவால் காத்திருந்த அதிர்ச்சி... பாக்கியா எங்கே என்ற குழப்பத்தில் கோபி... 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ வீடியோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலானது விறுவிறுப்புக்களுடன் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புக்களைத் தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில்  கோபி ராதிகாவிடம்  "ராதிகா இங்க வேற யாருமே இல்லை, நானும் நீயும் மட்டும் தான் இருக்கோம்" என ரொமாண்டிக் லுக்கில் கூறுகின்றார்.


பின்னர் ராதிகா "நான் அவளை பார்த்தேன்" எனக்கூறுகின்றார். அதற்கு கோபி "யாரை" எனக் கேட்கின்றார். பதிலுக்கு ராதிகா "உங்க வேலைக்காரியைத் தான்" என்று கூறிவிட்டு எழுந்து செல்கின்றார். ராதிகா கூறியதைக் கேட்டதும் கோபி அதிர்ச்சி அடைகின்றார். மேலும் "பழனிச்சாமி இங்க இருக்கான், செல்வியும் இங்க இருக்கா, அப்போ பாக்கியா" என தன்னைத் தானே கேட்டு ஷாக் ஆகின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement