• Jan 19 2025

சன்டிவி நடிகருக்கு அடித்த அதிஷ்டம்.. தமன்னாவின் அடுத்த ப்ராஜெக்ட்டில் கூட்டணி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

வெள்ளித் திரையில் நடிகர்கள், நடிகைகள் எப்படி பிரபலமாக காணப்படுகின்றார்களோ அதே போல சின்னத்திரையில் நடிக்கும் நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று காணப்படுகின்றார்கள்.

கடந்த காலங்களில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு  சென்று சாதித்தவர்களே அதிகமாக காணப்படுகின்றார்கள். அதன்படி வாணி போஜன், பிரியங்கா சங்கர், கவின், சிவகார்த்திகேயன் என்று பலரை வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரையில் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் பிரபலமான ஒருவர்தான் நடிகர் ராகுல் ரவி. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். ஆரம்பத்தில் மாடலாக இருந்தார். அதன் பின்பு சின்னத் திரையில் காலடி பதித்தார். மலையாளத்தில் வெளியான பொன்னம்பிலி என்ற சீரியல் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனாலும் அது பெரிதாக போகவில்லை.


இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அந்த சீரியலை தொடர்ந்து நந்தினி 2, சாக்லேட், கயல், அபியும் நானும், கண்ணான கண்ணே, என்று பல சீரியல்கள் நடித்தார். தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் தமன்னாவுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ராகுல் ரவி, அவருடன் ப்ராஜெக்ட் ஒன்றில் பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தமன்னாவுடன் நடிக்க போகின்றாரா என்று கேள்வி எழுப்பியதோடு அவருக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement