• May 18 2024

பிக்பாஸை மிரட்டிய ஜிபி முத்து-அதுவும் எதற்காக தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 சீசன்களாக வெற்றிகண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6வது சீசன் நடைபெறுகின்றது.இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.இவ்வாறுஇருக்கையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள்.

மேலும் இதில் முக்கிய போட்டியாளராக ஜிபி முத்து கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக உள்நுழைந்த ஜிபி முத்து, முதல் நாள் பயந்ததும், அவருக்கு ஆதாம், ஏவாள் உதாரணத்தை சொல்லி கமல் சமாதானம் சொன்னதும் வைரலானது.

இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸ் வீட்டின் கேமராவின் முன்னால் நின்று கொண்டு ஜிபி முத்து நிறையவே பேசுகிறார். எப்போதுமே இப்படி கேமராவை பார்த்தால் தனியாக பேசி சந்தோஷங்களை வெளிப்படுத்தும் ஜிபி முத்து, முன்னதாக தன்னுடைய குடும்பத்திற்கு ஹாய் சொல்லி இருந்தார். தான் ஜாலியாக இருப்பதாவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் குயின்ஸி, நிவாஷினி உள்ளிட்டோர் ஜிபி முத்துவுடன் இணைந்து பிக்பாஸ் வீட்டின் ஒரு கேமராவின் முன்னால் நின்றபடி தங்களது ஆடைகளை தரசொல்லி கேட்கின்றனர். அப்போது ஜிபி முத்து தனது உள்ளாடைகளை தர சொல்லி கேட்கிறார். 

ஏற்கனவே  தன் டிரெஸ் வந்தால் தன் ரேஞ்சே வேற என சொல்லி கொண்டிருந்த ஜிபி முத்து, இம்முறை தன் உள்ளாடைகளை தரவில்லை எனறால் அவ்வளவுதான் பாத்துக்கிடுங்க என தன் ஸ்டைலில் சொல்ல, கேமரா தலையாட்டுகிறது. அப்போது, “ஆஹா.. ஏன் அதட்டி சொன்னாதான் கேப்பியளா?” என மீண்டும் ஜாலியாக கேட்கிறார்.


Advertisement

Advertisement