• Oct 16 2024

கவின் எனக்காக வெறித்தனமான செயற்படுவான்; அவன பாத்து நிறைய மோட்டிவேட் ஆகியிருக்கன்! பிரதீப் சுவாரஸ்யம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.  நடிகர் கவினின் நெருங்கிய நண்பன் பிரதீப் என்பதும் யாவரும் அறிந்ததே. கவின் டாடா படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிரதீப்  இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சூப்பராக விளையாடி வந்தார். இதனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, ஓவராக பிக்பாஸ் வீட்டில் பொல்யூட் செய்து விளையாடியதால்,  ஒரேயடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 


இந்த நிலையில், தன் நண்பன் கவினை பார்த்து நிறைய விடயம் தான் கற்றுக் கொண்டதாக பிரதீப் பகிந்துள்ளார்.மேலும் தங்கள் நட்பை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை தொடர்ந்து வருகிறோம். கேவலமான விஷயங்களுக்காக எல்லாம் சண்டை போட்டுள்ளோம். கல்லூரி படிக்கும்போது எலெக்ஷனில் போட்டியிட்டு தோற்றன். அதற்காக கவின் பிரசாரமும் செய்தான்.எனினும் எலெக்ஷனில் தோற்ற போதிலும் ஜெயித்தவர்களை காட்டிலும் தாங்கள் சிறப்பாக கொண்டாடியதாகவும் தெரிவித்தார். அத்துடன் நாம் இருவரும் அதிகமாக பேசிக் கொள்வதற்கு நேரம் கிடைக்காது என்றபோதிலும் ஒருவருக்காக மற்றவர் இருப்பார் என்ற நம்பிக்கை மட்டும் எப்போதும் போகாது.


அதுமட்டுமின்றி, நாங்க எப்போதும் பிறந்தநாட்களை கொண்டாடியதில்லை ஆனா காதலர் தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடுவோம் என்றும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதுடன் ஒரே கிளாசில் இரண்டு ஸ்ட்ராக்களை போட்டு ஜூஸ் குடிப்பது போன்ற அலப்பறைகளை செய்வோம்.

அதேவேளை, எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதை முனைப்புடன் செய்து முடிக்கும் கவினை பார்த்து தான் நான் அதிகமாக உத்வேகம் அடைந்தேன். எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, கவின் தன்னுடைய அனைத்து முயற்சிகளிலும் வெறித்தனமாக செயல்பட்டு வருவதாகவும் தானும் ஓரளவிற்கு அதை செய்து வருவதாகவும் பிரதீப் மேலும் கூறியுள்ளார்.


Advertisement