கொரோனா குமார்' படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான நடிகர் சிம்பு, அந்த படத்தை தவிர்த்து ஏனைய படங்களில் நடித்து வருவதால், அவர் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், அதற்கான தீர்ப்பு தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிக்க கடந்த 2021ம் ஆண்டு நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.9.5 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ.4.5 கோடி முன்பனமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், பணத்தைப் பெற்றுக் கொண்டதோடு, இது வரையில் குறித்த படத்தில் நடிக்க முன்வரவில்லை. ஆனால் ஏனைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதன் காரணமாகவே, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிம்புவிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஒரு கோடி ரூபாய் மட்டுமே முன்பணமாக சிம்பு வழங்கிய நிலையில், குறித்த பணத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து நடிகர் சிம்பு தரப்பில் இருந்து, நீதிமன்ற உத்தரவை மதித்து ஒரு கோடி ரூபாய் ஏற்கனவே டெபாசிட் செய்ததற்கான ரசீது தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இறுதியாக கொரோனா குமார் படத்தில் நடித்து முடித்த பின்னரே சிம்பு மற்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து அதிரடி உத்தரவு காட்டியுள்ளது.
Listen News!