• May 18 2024

துப்பாக்கி ஏந்திய நிலையில் மாஸ் லுக்கில் கௌதம் கார்த்திக் - பத்து தல திரைப்படத்திலிருந்து வெளியாகிய புதிய போஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கௌதம் கார்த்திக் பிறந்தநாளை முன்னிட்டு 'பத்து தல' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் தற்பொழுது நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் தான் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக மாநாடு என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.


இதனைத் தொடர்ந்து தற்பொழுது  வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.இதில் பத்து தல படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கி வருகின்றார். இப்படம் கன்னடத்தில்  சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காகும்.

இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. 


இந்நிலையில் கௌதம் கார்த்திக் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய நிலையில் மாஸ் லுக்கில் கௌதம் கார்த்திக் தோன்றியுள்ளார்.பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement