• May 18 2024

திடீரென இடைநிறுத்தப்பட்ட தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு - பிளானை மாற்றிய படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்த வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். அத்தோடு சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் ஈசிஆர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடைபெற்றுவந்தது. இதனால், அந்த பகுதியில் இருக்கும் மக்களின் மூலமாக விஜய்யின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.

இதனால், வேறு இடத்திற்கு மாற்றி தனியாக செட் அமைக்கப்பட்டு வருவதால் படப்பிடிப்பானது இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். செட் அமைக்கும் பணி முடிந்தவுடன் மீண்டும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இப்படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement