• Jan 19 2025

மனைவியாக இல்லாமல் காதலியாக இருந்திருக்கலாம்.. புலம்பும் நடிகை ஃபரீனா..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி, சன் டிவி, ஜீ டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான ஃபரீனா ஆசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மனைவியாக இல்லாமல் காதலியாக இருந்திருக்கலாம்’ என்று புலம்பி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொலைக்காட்சி சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் கடந்த 10 வருடமாக நடித்து வருகிறார் என்பதும் ’அழகு’ ’பாரதி கண்ணம்மா’ ’நாச்சியார்புரம்’ ’பாரதி கண்ணம்மா 2’ உள்பட பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் தற்போது கூட அவர் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்தது.

நடிகை ஃபரீனா கடந்த 2017 ஆம் ஆண்டு ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பின்பும் விஜய் டிவியின் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் ஃபரீனா கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஃபரீனா ஆசாத்துக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்றும் தனது ஃபாலோயர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்று முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’கிருஷ்ணரும் ருக்மணியும் பேசிக்கொண்டு இருந்தார்கள்,  நானும் தான் உங்களை காதலித்தேன், இருப்பினும், உங்கள் மனைவியாக இல்லாமல் காதலியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஏன் தோன்றுகிறது என தெரியவில்லை என்றாராம்.  கிருஷ்ணரும் ஏன் என்று கேட்க, அதற்கு ருக்மணி சொன்னாளாம், ‘கணவன் மனைவி மத்தியில் உறவு எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் காதலியை  தானே நினைவு கொள்கிறார்கள், ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா’ என்று ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக் கமெண்ட் குவிந்து வருகிறது.



Advertisement

Advertisement