• Jan 19 2025

இனிமேல் கிச்சன் என் ஏரியா.. கோமதியிடம் ஸ்ட்ரிக்டா சொன்ன தங்கமயில்.. வேலைக்கு போகும் ராஜி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் தங்கமயில் என பாண்டியன் கூப்பிட்டதால் கடுப்பான கோமதி ஆத்திரத்துடன் செல்லும்போது ’உன்னுடைய அப்பா பேசுகிறார், இந்தா’ என்று போனை கொடுத்தவுடன் கோமதி அப்படியே அடங்கிவிட்டார்.

வேறு எதற்காக கூப்பிட்டு இருந்தாலும் சண்டை போடலாம், அப்பாவிடம் இருந்து போன் வந்தால் என்ன செய்ய முடியும் என்று தனது மருமகள்களான மீனா, ராஜியிடம் சொல்லி கோமதி சமாளித்தார்.

இந்த நிலையில் அடுத்ததாக செந்தில், கதிர் மற்றும் அவர்களுடைய சித்தப்பா மூவரும் மொட்டை மாடியில் பாண்டியனின் நடத்தை குறித்து பேசி வருகின்றனர். ஒரு மருமகளை மட்டும் புகழ்ந்து பேசுவது சரியல்ல என்பது அப்பாவுக்கு தெரியவில்லை என செந்தில் மற்றும் கதிர் புலம்புகின்றனர்.

இதனை அடுத்து செந்தில் மற்றும் மீனா தங்களுடைய அறையில் பேசிக் கொண்டிருக்கும் போது அப்பா ஒரு மருமகளை மட்டும் புகழ்ந்ததும், உன்னை குற்றம் சொன்னதையும் உனக்கு பெரிதாக தெரியவில்லையா என்று கேட்க, மீனா அதற்கு கிண்டலாக ’நான் இந்த வீட்டில் நல்ல மருமகள் என்று பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை, எனக்கு வேலை குறைந்தால் சரி’ என்று கூறுகிறார். அப்போது ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெறுகின்றன.



இதனை அடுத்து சரவணன் மற்றும் தங்கமயில் தங்களது அறையில் இருக்கும் போது தங்கமயில் சாரி கேட்கிறார். ஏன் என்று கேட்டதற்கு ’முதலிரவில் தூங்கிவிட்டேன்’ என்று கூற ’அதற்கெல்லாம் சாரி கேட்க வேண்டிய அவசியம் இல்லை,  தூக்கம் வந்தால் தூங்க வேண்டியது தான்’ என்றார். அதன் பிறகு தங்கமயில் தயங்கிக் கொண்டேன் ’உங்களுடைய முதல் காதல் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள், அதை தெரிந்து கொள்ள வேண்டும் போல் ஆவல் இருக்கிறது’ என்று சொல்ல ’இன்னொரு நாளைக்கு சொல்கிறேன்’ என்று சரவணன் சொல்லும் போது திடீரென கரண்ட் போகிறது.

இந்த நிலையில் ராஜி மற்றும் கதிர் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் ராஜி ’நீ எனக்காக செலவு செய்வதை பார்க்கும்போது சங்கடமாக இருக்கிறது, நான் வேண்டுமானால் வேலைக்கு போகவா’ என்று சொல்ல ’நீ வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் காலேஜ் படிப்பை எல்லாம் முடித்துவிட்டு மீனா அண்ணி மாதிரி ஒரு நல்ல வேலைக்கு போ, அப்பதான் உனக்கு கெத்தா இருக்கும்’ என்று கூற அதற்கு ’இப்போதைக்கு நான் ஒரு வேலைக்கு போறேன்’ என்று ராஜி மீண்டும் சொல்ல கதிர் ’அதெல்லாம் வேண்டாம் பேசாமல் படு’ என்று கதிர் சொல்ல ராஜி அதிருப்தி அடைகிறார்.

இந்த நிலையில் அதிகாலையில் எழுந்து வழக்கம் போல் தங்கமயில் பூஜை முடித்த நிலையில் ‘டீ வைத்திருக்கிறேன், எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கோமதியுடன் சொல்கிறார். ’நானே போட்டுக் கொள்வேனே’ என கோமதி சொல்ல ’இனிமேல் கிச்சன் என் ஏரியா, அங்கே யாரும் வரக்கூடாது’ என்று கூறிவிட்டு தங்கமயில் செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.

Advertisement

Advertisement