• Jan 19 2025

ரோகிணிக்கு கண்டிஷன் போட்ட க்ரிஷ்.. முத்துவுக்கு கிடைத்த ஷாக்! சந்தேகத்தில் மீனா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வித்யா வீட்டிற்கு மலேசியா மாமா வந்திருக்க மீனா இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று சந்தேகப்பட்டு வெளியே வர, அதற்குள் அவரை வித்யா அனுப்பி வைத்து அது இந்த ஏரியா கறிக்கடைக்காரன் என்று சொல்லி சமாளிக்கிறார்.

மறுபக்கம் நான் தான் உனது அம்மா என்று சொன்ன ரோகிணியிடம் ஏன் இவ்வளவு நாளா உண்மைய சொல்லலை என்று கேட்கிறார் க்ரிஷ். மேலும் நான் ஏதும் தப்பு பண்ணினேனா என்று கேட்க, அதற்கு ரோகிணி பெரியவங்க பண்ண தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்கிற என்று சொல்லுகிறார்.

மேலும் ஸ்கூல்ல என்ன எல்லாரும் அம்மா அப்பா இல்ல என்று கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க, நீ வந்து என்னன்னு கேளு என்று சொல்ல, அதையெல்லாம் இப்ப கேட்க முடியாது. அதற்கான நேரம் வரும் அதுவரைக்கும் நான் தான் உன் அம்மா என்று சொல்லக்கூடாது என்று சொல்ல, சொல்ல மாட்டேன் ஆனால் எனக்காக நீங்க ஒன்னும் பண்ணனும், நாளைக்கு கட்டு அவிழ்க்கும் போது நீதான் முன்னாடி வந்து நிக்கணும், நான் உன்ன தான் முதல்ல பாக்கணும் என்று சொல்ல, ரோகிணி வேறு வழி இன்றி  சம்மதிக்கிறார்.

இதை அடுத்து ரோகிணி வீட்டுல யாரும் இல்லை. அதனால எல்லாம் எடுத்துட்டு சீக்கிரம் கிளம்ப சொல்லி, இவர்கள் வெளியே கிளம்பும் போது முத்து வீட்டுக்கு வருகிறார். இதனால் ரோகிணி  பேக்கை கொண்டு போய் மறைத்து வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருக்கிறார். உள்ளே வந்த முத்து இனி சவாரி இல்லை க்ரிஷ் கூட விளையாடிட்டு இருப்பேன் என்று சொல்லி, நீ என்ன இன்னைக்கு வேலைக்கு போகலையா என்று ரோகிணியிடம்  கேட்க, நான் இன்னைக்கு லேட்டா போவேன் என்று சொல்லுகிறார் ரோகிணி.


அதன் பிறகு ரோகிணி க்ரிஷ்க்கு சாப்பாடு ஊட்டி விடுவதை பார்த்து முத்து ஷாக் ஆகிறார். இதன் போது என்ன நடக்குது என்று கேட்க, ரோகினி எதையோ சொல்லி சமாளிக்க, இதுக்கு பேர்தான் கல்லுக்குள் ஈரம் என்று சொல்லுவாங்க போல இதுவும் நல்லா தான் இருக்கு என்று சொல்லிச் செல்கிறார் முத்து.

இன்னொரு பக்கம் மீனா வித்யாவிடம் என்னோட குடும்பம் சந்தோஷமா இருக்கணும். என் அத்தை எனக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல மனுஷன பெத்து கொடுத்து இருக்காங்க என்று பேசிக்கொண்டு இருக்க, ரோகிணி சொன்ன மாதிரி மீனா தப்பானவங்க இல்ல என்று வித்யா புரிந்து கொள்கிறார்.

இதே தொடர்ந்து மீனா வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு லேட் என்று கேட்க, வித்யாவிடம் இருந்து பேசுனதுல டைம் போனது  தெரியல. அவங்க எனக்காக கறி வாங்கி சமைச்சாங்க என்று சொல்ல, முத்துவும் ரோகிணி க்ரிஷுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட விஷயத்தை சொல்கிறார். அதற்கு மீனா, அவங்களும் பொண்ணு தானே அவங்களுக்குள்ள ஒரு தாய்மை இருக்கும்ல என்று சொல்கிறார்.

இறுதியாக க்ரிஷுக்கு ஒரு கண்ணாடி வாங்கி வந்திருப்பதாக எடுத்துக் கொடுக்கிறார் இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை  சீரியல் எபிசோட்.

Advertisement

Advertisement