தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், பாடகர், ராக் ஸ்டார் அனிருத் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ள மேடை இசை நிகழ்ச்சி #Hukum சென்னை ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த மாபெரும் நிகழ்ச்சி ஜூலை 26ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருவிடந்தையில் நடைபெறவுள்ளது. டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியவுடன் 45 நிமிடங்களுக்குள் முழுவதும் விற்பனையாகி சாதனை அளிக்கும் நிகழ்வாக இது மாறியுள்ளது.
இந்திய திரைப்படங்கள் முழுவதிலும் பரவி பான் இந்திய இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத், தன்னுடைய இசை பயணத்தில் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துக்கொள்வது போன்று இந்த நிகழ்ச்சியையும் ஒரு அனுபவமாக மாற்றியுள்ளார்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வெளியானவுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய சில நிமிடங்களில் இணையதளத்தில் வரிசை நிறைந்தது. இதில் பலருக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமலே போன நிலையில் கூடுதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!