• May 18 2025

தனுஷ் படத்துக்கு நோ சொன்ன பிரபல பெண் யூடியூப்பர்..!

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் தனுஷ் தற்போது படம் நடிப்பதை விட இயக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றார். பவர்பாண்டி ,ராயனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தற்போது இட்லி கடை எனும் படத்தினை இயக்கி நடித்து வருகின்றார். இதைவிட குபேரா எனும் படத்திலும் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவர் அடுத்து அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஹீரோயினாக சுருதிகாசன் கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது.


மேலும் இந்த படத்தில் " செக்கண்ட் ஹீரோயினா நடிக்க கூப்பிட்டாங்க. ஆனா நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் " என பிரபல பெண் யூடியூப்பர் கனி குறிப்பிடுள்ளார். மேலும் படத்தை நிராகரித்தமைக்கான காரணத்தை தெளிவாக குறிப்பிடவில்லை.

Advertisement

Advertisement