• Apr 28 2024

சொத்து எல்லாம் விற்றும் இன்னும் சரி ஆகவில்லை- 5 வருடமாக கடும் நோயினால் அவதியுறும் இயக்குநர் விக்ரமனின் மனைவி

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், புதுவசந்தம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் விக்ரமன். இவரின் முதல் படமே  தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான இரண்டு விருதை பெற்றது. இதனைத் தொடர்ந்து  பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இதில் இவர் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் இருடைய கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.அதே போல் 'சூர்யவம்சம்' திரைப்படம் சுமார் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை செய்தது. மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய உன்னை நினைத்து, விஜயகாந்த் 2 வேடங்களில் நடித்த வானத்தை போல, மரியாதை, மாதவனை வைத்து இயக்கிய 'பிரியமான தோழி' போன்ற படங்கள் தற்போது வரை பல ரசிகர்களின் ஃபேவரட் படங்களாக உள்ளது.


இவர் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' என்கிற படத்தை தான் இயக்கி இருந்தார்.இவரின் மனைவியான ஜெயப்பிரியா பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். தற்போது அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில், எனக்கு முதுகு வலி இருந்ததால், மருத்துவமனைக்கு சென்றேன். 

சிடி ஸ்கேன், ஸ்கேன் என பரிசோதனை செய்துவிட்டு, இது கேன்சர் போல இருக்கு இதனால், பயாப்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார்கள். முதலில் இந்த அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. கேன்சராக இருக்குமோ என்பதால், என் கணவர் மிகவும் பயந்துவிட்டதால், அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டேன். ஆப்ரேஷன் வெறும் அரைமணி நேரம் மட்டுமே நடக்கும் என்று சொன்னார்கள்.


ஆனால், மூன்றரை மணி நேரம் நடந்தது. பத்து நாள் கழித்து என் கால் விரலை என்னால் அசைக்கவே முடியவில்லை. பின் ஒரு மாதம் மருத்துவமனையில் வைத்துவிட்டு வீட்டுக்கு போய், பிசியோதெரப்பி செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டார்கள். மருத்துவமனை தப்பான ஆப்ரேஷன் செய்துவிட்டு, அதன் பிறகு எனக்கு எந்த விதமான உதவியையும் செய்யவில்லை.

நானும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அனைத்துவிதமான மருத்துவத்தையும் செய்துவிட்டேன். ஆனால், எனக்கு இதுக்கு மேல என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் என்னுடன் எப்போதும் இரண்டு நர்சுகள் இருக்கிறார்கள், பரதநாட்டிய கலைஞரான என்னால், எழுந்துகூட நிற்க முடியவில்லை, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை யூரியன் பேக் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

என்னை நினைத்து என் கணவர் மிகவும் வேதனைப்படுகிறார். கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒவ்வொரு சொத்தையும் விற்றுத்தான் எனக்கான மருத்துவ உதவியை செய்து வருகிறார். இப்போதும் சூர்யவம்சம்2 திரைப்படத்தை எடுக்கும்படி கேட்கிறார்கள். ஆனால், என்னை இந்த நிலைமையில் விட்டுவிட்டு போகமாட்டேன் என்கிறார். எப்படி இருந்த உன்னை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை என கண்கலங்குகிறார். நானும் அழுதால் அவர் கதறிவிடுவார் என்று 5 வருஷமாக தைரியமாக இருக்கிறேன் என்று கண்கலங்கி பேசினார். இந்த பேட்டி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement