யாரடி நீ மோஹினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்த இவருக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலிலும் நடித்து வருகின்றார்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் நடிக்க சைத்ரா ரெட்டி ஒரு நாளுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அண்மையில் கயல் சீரியலில் கயலை கௌதம் கடத்தி துாக்குப்போட்டு கொலை செய்வது போல சீன் அமைந்திருந்தது.இதனை சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துாக்குப்போடும் போது காலின் கீழே ஐஸ்கட்டி கட்டியை வைத்திருக்கின்றார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!