• May 18 2024

'லியோ' திரைப்படம் ஜெயிலர் வசூலை முறியடிக்கப்போவது confirm... அடித்துக்கூறும் ரசிகர்கள்.. எதனால் தெரியுமா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் நடிகர் ரஜினி அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். இதில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் ஹிட்டானது. நெல்சனின் கடந்த படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் கம்பேக் கொடுத்துள்ளார். 


அந்தவகையில் ஜெயிலர் இறுதியாக ரூ. 635 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாடு - ரூ. 205 கோடி, தெலுங்கு - ரூ. 88 கோடி, கேரளா - ரூ. 58.50 கோடி, கர்நாடகா - ரூ. 71. 50 கோடி, இந்தியாவில் எஞ்சியிருக்கும் மற்ற இடங்களில் - ரூ. 17 கோடி, வெளிநாடு - ரூ. 195 கோடி என்றவாறு வசூலினை பெற்ற நிலையில் மொத்தமாக ரூ. 635 கோடி கோடியினைப் பெற்றிருந்தது.


இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ஒரு திரைப்படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இப்படமானது உலகளவில் ரூ. 487 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், கண்டிப்பாக ரூ. 600 முதல் ரூ. 700 கோடி வரை வசூல் செய்து ஜெயிலர் வசூலினை முறியடிக்கும் எனப் பலரும் உறுதியாக கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement