• Oct 16 2024

ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் யார் தெரியுமா?- இத்தனை சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 10 தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது. இப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான்  விநாயகன்.

இவர் பற்றி தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க. கேரளாவை பூர்வீகமாக கொண்ட விநாயகன், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் விநாயகன் பிளாக் மெர்குரி என்ற பெயரில்  டான்ஸ் ரீம் ஒன்றை நடத்தி வந்தார்.பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடன இயக்கநர் என பன்முகத் தன்மை கொண்ட விநாயகம், மலையாளம், தமிழ் என பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இவர் கடந்த  1995 ஆம் ஆண்டு வெளியான மாந்திரிகம் என்ற மலையாளப்படத்தின் மூல வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.பின்னர், அவர் இரண்டு படங்களில் துணை வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்தார். ஆனால் அதனை அடுத்து அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவரும் பெரிதாக முயற்சி செய்யாமல் தனது நடனக்குழுவில் கவனத்தை செலுத்தினார்.

அதன்பின் கம்மட்டிபாடம் படத்தில் கங்காவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது, அமெரிக்க திரைப்பட விருது, சினிமா பாரடிசோ கிளப் சினி விருது என பல விருதுகளை பெற்று முன்னணி நடிகராக மாறினார்.


இவர் தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு அடியாளாக நடித்திருந்தார். இந்த படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரையும் மிரட்டினார். அதன் பிறகு சிம்பு நடித்த சிலம்பாட்டம்' மற்றும் காளை, சிறுத்தை போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் விநாயகனுக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் அது தனுஷின் நடித்த மரியான் திரைப்படம் தான். இந்த படத்தின் விநாயகன் கேரக்டர் ரசிகர்கள் மனதில் இன்னும் இருக்கும்.

தற்போது ஜெயிலர் படத்தில் வில்லான நடித்த நடிகர் விநாயகனின் வில்லத்தனத்தை பார்த்து ரசிகர்களே மிரண்டு போனார்கள் என்று சொல்லும் அளவுக்கு பவர்ஃபுல்லாக இருக்கிறது. ரஜினியின் கேரக்டருக்கு ஈடாக விநாயகனின் கதாபாத்திரம் பூஸ்ட் செய்யப்பட்டு சும்மா, அதிரிபுதிரி செய்துள்ளார். ஜெயிலர் படத்தில் விநாயகன் காட்சியில் தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது அந்த அளவுக்கு அவர் மிரட்டி இருக்கிறார். என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement