• Apr 28 2024

மாளவிகா மோகனனுக்கு முத்தம் கொடுக்கும் இந்த நபர் யார் தெரியுமா? இவர்களுக்குள் இப்படியொரு உறவா?

Jo / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தா மாளவிகா மோகனன். இதன்பின் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதை தொடர்ந்து தனுஷுடன் இணைந்த மாளவிகா மாறன் எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

மேலும் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய பிறந்தநாள் பரிசாக அப்படத்தில் இருந்து மாளவிகாவின் லுக் போஸ்டர் வெளிவந்தது.

நேற்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கோலாகலமாக மாளவிகா கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்தது.

இந்நிலையில், அதில் ஒருவர் மாளவிகா மோகனனை நெருக்கமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் கூட வெளிவந்தது. அவருக்கு மாளவிகா திருப்பி முத்தம் கொடுக்கும் புகைப்படமும் வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

அவர் தான் மாளவிகாவின் காதலரான என கேட்க துவங்கிவிட்டனர். ஆனால், அவர் மாளவிகாவின் நண்பர் தானாம், காதலர் கிடையாதாம் என தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .



Advertisement

Advertisement

Advertisement